தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் முன்னிலையில் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை ஆகிய துறைகளின் சார்பில் தென்மேற்கு பருவமழை- 2022-யை முன்னிட்டு பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி இன்று (04.07.2022) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்து விளக்க உரை ஆற்றினார்கள். அதனைத் தொடர்ந்து எதிர்பாராத விதமாக ஏற்படும் தீ விபத்துகளை எவ்வாறு அணைப்பது குறித்த செயல் விளக்கமும், பேரிடர் காலங்களில் கட்டட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது குறித்த செயல் விளக்கமும், விபத்து ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகும் நபர்களை எவ்வாறு பத்திரமாக மீட்க வேண்டும் என்பது குறித்த செயல் விளக்கமும், தீ விபத்து எற்படும் பொழுது அத்தீயிணை எவ்வாறு பாதுகாப்பாக அணைப்பது என்பது குறித்த செயல் விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான மர அறுவை இயந்திரங்கள், கட்டட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்பதற்க்கான அதிநவீன இரும்பு கம்பிகளை நறுக்கும் கருவிகள், நீரில் மூழ்கியவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான ஜாக்கெட்டுகள், அதிநவீன பைபர் போட்டுகள், பாதுகாப்பு, மீட்பு கருவிகள் மற்றும் உயர்ந்த கட்டடங்கள் போன்றவற்றில் எதிர்பாராத விதமாக ஏற்படக்கூடிய தீ விபத்துகளை தீயணைப்பு வாகனத்தின் மூலம் தண்ணீர் கொண்டு எவ்வாறு அணைக்கப்படுகின்றது என்பது குறித்தும், புயல், மழை, வெள்ளம், தீ விபத்து, விபத்து போன்ற பேரிடர் காலங்களில் எதிர்பாராத விதமாக சிக்கி கொள்பவர்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்தும் அவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்த செயல் விளக்கமும் தீயணைப்பு, மீட்புப்பணியின் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மீட்புபணி வீரர்களால் செய்து காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தீயணைப்பு, மீட்புப்பணிகள் துறையின் உதவி மாவட்ட அலுவலர் திரு.டி.ஆனந்த், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) / தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் திருமதி.வி.கே.சாந்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு.ஜெ.ஜெயக்குமார், பேரிடர் மேலாண்மைத் துறை தனி வட்டாட்சியர் திரு.கே.ரமேஷ், தருமபுரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய தீயணைப்பு அலுவலர்கள் திரு.கே.ராஜா, திரு.பா.கோபால், திரு.கோ.செல்வமணி உட்பட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய தீயணைப்பு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக