15.08.2022 சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடப்படும். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

15.08.2022 சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடப்படும்.

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003 -12 விதியின் படி, 15.08.2022 சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடி விற்பனை இல்லா தினமாக (DRY DAY) கடைபிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் உத்தரவின் படி, எதிர்வரும் 15.08.2022 சுதந்திர தினத்தை முன்னிட்டு விற்பனை இல்லா தினமாக (DRY DAY) கடைப்பிடிக்கப்படுவதால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (TASMAC) மற்றும் மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் ஓட்டல்கள் (FL-3, FL-3A, FL-4A) அனைத்தும் 15.08.2022 சுதந்திர தினத்தை முன்னிட்டு அன்றைய தினங்களில் மூடப்படும் என்றும், இந்த உத்தரவினை மீறி மது விற்பனையில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad