இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான 47 ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு முதல்முறையாக ஏலம் விடப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

இந்து அறநிலைத்துறைக்கு சொந்தமான 47 ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு முதல்முறையாக ஏலம் விடப்பட்டது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், புலிக்கல் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், அருள்மிகு சென்றாயசுவாமி திருக்கோயில் மற்றும் அருள்மிகு முனியப்பசுவாமி திருக்கோயில்களுக்கு பாலக்கோடு ஆய்வர் சி.துரை அவர்களால் தக்கார் நிலையில் நிர்வாகம் கவனிக்கப்பட்டு வருகிறது. 

காசி விஸ்வநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் பரப்பு 20.81 ஏக்கர்.சென்ட் நிலங்கள் ரூபாய்.99,300/-க்கு 14 விவசாயிகளாலும் சென்றாயசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் பரப்பு 18.72 ஏக்கர்.சென்ட் நிலங்கள் ரூபாய்.47,800/-க்கு 5 விவசாயிகளாலும் முனியப்பசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் பரப்பு 7.76 ஏக்கர்.சென்ட் நிலங்கள் ரூபாய்.28,000/-க்கு 11 விவசாயிகளாலும் ஏலம் எடுக்கப்பட்டது. 11.08.2022 பசலி 1432-க்கு முதன்முறை பொது ஏலம் விட இந்து சமய அறநிலையத்துறை தருமபுரி உதவி ஆணையர் திரு.உதயகுமார் அவர்கள் உத்தரவின்படி பாப்பிரெட்டிப்பட்டி ஆய்வாளர் திரு.மணிகண்டன் கண்காணிப்பில், கிராம நிர்வாக அலுவலர், புலிக்கல் மற்றும் எர்ரசீகலஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டு மூன்று திருக்கோயில்களுக்கும் ரூபாய்.1,75,100/- ஆண்டுக்கு வருவாய் ஈட்டப்பட்டது. 

இதுவரை பாலக்கோடு ஆய்வர் திரு.சி.துரை தலைமையில் 20 திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் 467.80 ஏக்கர்.சென்ட் நிலங்கள்  முதன் முறை பொது ஏலம் வைக்கப்பட்டதில் ஆண்டுக்கு ரூபாய்.14,67,500/- இந்து சமய அறநிலையத்துறைக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad