காங்கிரஸ் கட்சி சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழா பாதயாத்திரை நாளை நடைபெறுகிறது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 ஆகஸ்ட், 2022

காங்கிரஸ் கட்சி சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழா பாதயாத்திரை நாளை நடைபெறுகிறது.

தர்மபுரி பாப்பாரப்பட்டியில் நாளை (11.08.2022-வியாழன்) காங்கிரஸ் கட்சி சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழா பாதயாத்திரையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கே.எஸ். அழகிரி தொடங்கி வைக்கிறார். பாதயாத்திரை இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின பவள விழாவையொட்டி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் 75-வது சுதந்திர தின பவள விழா பாதயாத்திரை பாப்பாரப்பட்டியில் நாளை தொடங்குகிறது. இந்த பாதயாத்திரை தொடக்க விழா பாப்பாரப்பட்டிவில் உள்ள பி.கே.எஸ். மஹாலில் காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டு பாதயாத்திரையை தொடங்கி வைத்து பேசுகிறார், முன்னதாக அவர் அங்குள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். 


இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவரும், தர்மபுரி மாவட்ட பொறுப்பாளருமான பி. தீர்த்தராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாப்பாரப்பட்டியில் நாளை நடைபெறும் 75-வது சுதந்திர தின பவள விழா பாதயாத்திரை தொடக்க விழாவிலும், பாதயாத்திரையிலும் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள், கட்சியின் முன்னோடிகள், தியாகிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad