அரூர் அரசு கலை கல்லூரியில் முதற்கட்ட சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 ஆகஸ்ட், 2022

அரூர் அரசு கலை கல்லூரியில் முதற்கட்ட சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி  2022-2023 கல்வி ஆண்டிற்கான முதற்கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 10.08.2022 முதல் 18.08.2022 வரை நடைபெற உள்ளது. 

முதலாம் நாளான 10.08.2022 இன்று சிறப்பு வகை மாணவர்களுக்கும் மற்றும்  தமிழ்த்துறையில் விண்ணப்பித்து தமிழ் பாடத்தில் 70 மதிப்பெண்கள் மேல் பெற்ற மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது 11.08.2022 அன்று ஆங்கில துறைக்கு விண்ணப்பித்த  அனைத்து மாணவர்களுக்கும், 12.08.2022 அன்று தாவரவியல் துறைக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் 16.08.2022 அன்று கணினி அறிவியல் துறை விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் 17.08.2022 அன்று  கணிதவியல் துறைக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் 18.08.2022 அன்று பொருளியல்  மற்றும் வணிகவியல் துறைக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் மாணவர் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும் முதலாம் கலந்தாய்விற்கு பிறகு தமிழ்த் துறையில் இருக்கும் காலி இடங்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் தமிழ் படத்தில் 69 முதல் 35 மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்களுக்கு 22.08.2022 அன்று கலந்தாய்வு நடைபெறும் மேலும் தரவரிசை பட்டியல் https://sites.google.com/view/gasc-harur/home என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad