தற்போது வாட்ஸ்ஆப், இணையதளம், குறுஞ்செய்தி மற்றும் இதர மின்னணு வகைகள் மூலம் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பணி வழங்கப்படுவதாகவும், இதற்கு முன்பணம் செலுத்தி பயிற்சி வழங்கி நிரந்தரப் பணி வழங்கப்படும் என போலியாக விளம்பரங்கள் வெளியாகி வருகின்றன.
கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் மூலம் மட்டுமே பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டு, உரிய முறையில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டு தகுதியின் அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் இணையதளம் மற்றும் வாட்ஸ் ஆப் செயலி ஆகியவற்றின் மூலம் வெளியாகும் போலியான செய்திகளை நம்பி ஏமாறாமல் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக