இந்து சமயஅறநிலையத்துறையின் வாகனம் பொது ஏல அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

இந்து சமயஅறநிலையத்துறையின் வாகனம் பொது ஏல அறிவிப்பு.

மாதிரி படம்.
தருமபுரி மாவட்டம் மற்றும் வட்டம், குமாரசாமிபேட்டை, செங்குந்தர் திருமண மண்டப வளாகத்தில் உள்ள, இந்து சமயஅறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலக அரசு வாகன எண்.TN 29 G 0515 (Tata spacio) ஈப்பு முதிரா நிலையில் கழிவு செய்யப்பட்டுள்ளது. 

கழிவு செய்யப்பட்ட வாகனம் எதிர்வரும் 29.08.2022 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் மேற்படி, உதவி ஆணையர் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது. எனவே, மேற்படி பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு விலைப்புள்ளியை கோரலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது, என உதவி ஆணையர் திரு.மா.உதயகுமார், இந்து சமய அறநிலையத்துறை, தருமபுரி மாவட்டம் அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad