தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம், அரசு தலைமை மருத்துவனை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திடட்டங்களின் கீழ் ஒப்பளிக்கப்பட்ட கீழ்காணும் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிருவாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வுச்சங்கம் (District Health Society) துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், தருமபுரி மாவட்டம் -636705
செயலாளர், மாவட்ட சுகாதார நலச்சங்கம், /துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், தருமபுரி
நிபந்தனைகள்:
- இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்டமாட்டாது.
- பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும்.
- நிருவாக காரணங்களால் இந்த அறிவிப்பை இரத்து செய்யவோ அல்லது நிறுத்தி வைக்கவோ மாவட்ட நலவாழ்வு சங்கத்திற்கு அதிகாரம் உள்ளது.
விண்ணப்பத்துடன் இருப்பிடச்சான்று, சாதிச்சான்று உட்பட விண்ணப்பிக்கும் பதவிக்குரிய கல்விச்சான்றிதழ் நகல்கள் சுயசான்றொப்பம் (Self Attested) இடப்பட்டு இணைத்தனுப்பப்பட வேண்டும்.
குறிப்பு:
- விண்ணப்பங்களை மாவட்ட வலைதள முகவரி www.dharmapuri.nic.in -யிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட வேண்டும்
- விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் / விரைவஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
- விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்:18.08.2022 நேரம் மாலை 5.45-மணிக்குள்
- ஒரு பதவிக்கு ஒரு நபரிடமிருந்து ஒரு விண்ணப்பம் மட்டும் அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக