அரூர் ஊராட்சி ஒன்றிய அளவிலான இளைஞர் மன்ற வளர்ச்சி முகாமின் நிறைவு விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 8 ஆகஸ்ட், 2022

அரூர் ஊராட்சி ஒன்றிய அளவிலான இளைஞர் மன்ற வளர்ச்சி முகாமின் நிறைவு விழா.

தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் அரூர் ஊராட்சி ஒன்றிய அளவிலான இளைஞர் மன்ற வளர்ச்சி முகாமின் நிறைவு விழா மற்றும் இளைஞர் மன்ற நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் ஆகியன  அருர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பொன்மலர் பசுபதி தலைமையில் இன்று நடைபெற்றது.

அரூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் அருண் முன்னிலை வகித்தார். அச்சல்வாடி ஊராட்சி தலைவர் கிருபாகரன், சென்னாங்குப்பம் ஊராட்சி தலைவர் குமரவேல், கொங்கு வேம்பு ஊராட்சி கவுன்சிலர் ரகுநாத், சமூக ஆர்வலர் சரிதா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் 75வது சுதந்திர தின ஆண்டினை சிறப்பாக கொண்டாடும் நோக்கில் வரும் ஆகஸ்ட் 13முதல் 15முடிய வீடுகள் தோறும் மூவர்ண கொடி ஏற்றி வைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிறைவாக அருர் ஊராட்சி ஒன்றிய தேசிய இளைஞர் தொண்டர்  ஜெய்கணேஷ் நன்றி கூறினார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad