தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் நடந்த 75 வது சுதந்திர தின அமுத பெருவிழா பாதயாத்திரையை பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கேபி ராமலிங்கம் துவங்கி வைத்து பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்திலிருந்து தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் வரை சுதந்திர தின விழாவை முன்னிட்டு பலர் கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்தில் அமைந்துள்ள பாரதமாதா நினைவாலயத்தில் மாலை அணிவிக்க முற்பட்டனர் அப்பொழுது பாரதமாதா நினைவாலயத்தில் இருந்த கதவுகள் பூட்டப்பட்டு இருந்த நிலையில் அங்கு பணியாற்றும் நினைவிட கண்காணிப்பாளரிடம் கதவை திறக்கும் படி வலியுறுத்தினர்.
கண்காணிப்பாளர் மறுத்ததால் எங்களுக்கே அனுமதியில்லையா என பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பாஸ்கர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே பி ராமலிங்கம் பாரதமாதா நினைவாலயத்தில் உள்ள கதவை பூட்டப்பட்டிருந்த பூட்டை கல்லால் உடைத்து திறந்து பாரதமாதா திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் இமயவர்மன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக