ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இதுவரை சுதந்திர தினவிழாவை கொண்டாடமல் இருக்க காரணம் என்ன? - கே.எஸ்.அழகிரி கேள்வி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இதுவரை சுதந்திர தினவிழாவை கொண்டாடமல் இருக்க காரணம் என்ன? - கே.எஸ்.அழகிரி கேள்வி.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில்  நடந்த 75 வது சுதந்திர தினவிழா பாதயாத்திரையை  காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்., அழகிரி துவக்கி வைத்தார். முன்னதாக அவர் பாப்பாரப்பட்டியில் உள்ள தியாகி சுப்பிரமணிய சிவா நினைவிடத்திற்கு ஊர்வலமாக வந்து அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பிறகு  அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது. : காந்தி, நேரு, வா.ஊசி. போன்றவர்கள் எல்லாம் சுதந்திரத்திற்காக போராடி சிறைக்கு சென்றனர். ஆனால் ஆர். எஸ். எஸ்., இயக்கம் அவர்களுடைய தொடர்புடைய கிளை இயக்கம் ஜனசங்கம் எல்லாம் ஒருநாள்கூட சுதந்திர போராடத்தில் பங்கேற்காதவர்கள், சுதந்திரத்திற்காக போராடி சிறை செல்லாதவர்கள்  அவர்கள் வரலாற்றில் இரண்டு முறைதான் தேசிய கொடி ஏற்றி உள்ளார்கள் நாக்பூரில், ஒரு முறை சுதந்திரம் கிடைத்த போது காவி கொடியுடன் தேசியகொடியை ஏற்றினார்கள்.

இரண்டாவது வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, தேசிய கொடியை ஏற்றினார்கள். சுதந்திர தினவிழாவை கொண்டாடும் முயற்சியை வரவேற்கிறோம். ஆனால் இதுவரை சுதந்திர தினவிழாவை கொண்டாடமல் இருந்தீர்கள் இதற்கு காரணம்  என்னவென்று அந்த இயக்கங்கள் தெளிவுப்படுத்த வேண்டும் என்று கூறிய அவர் மேலும் கூறும் போது, 

ஒரு மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி பொது வினியோக கடைகளில் தேசிய கொடியை 20 ரூபாய் கொடுத்து வாங்கினால் தான் அரிசி பருப்பு கொடுப்பதாக கூறி உள்ளனர். அது தவறு இந்த உணர்ச்சி மக்களிடையே இயல்பாக உருவாக்கவேண்டும் ஒரு அழுத்தம் கொடுத்து வாங்குங்கள் என கூறுவது சரியில்லை, மத்திய அரசு அதை மாற்றி கொள்ளவேண்டும். 

ஆளுனார் மாளிகையில் ரஜினி சந்தித்து அரசியில் பேசியது தொடர்பாக தவறு இல்லை என  புதுவை ஆளுனர் தமிழிசை பேசியது  குறித்து அழகிரி கூறும் போது. ஆளுனர் ஒரு கட்சியை சார்ந்தவர்தான் அவரும் வாக்களிப்பவர் தான் ஆனால் அவர் ஏன் சட்டமன்றத்தில் கருத்து சொல்ல முடிவதில்லை., அமைச்சரவை என்ன எழுதி கொடுக்கிறார்களோ அதை தான் அவர் வாசிக்கிறார். 

அதை நாம் சொல்லவில்லை அதனை அரசியல் சட்டம் சொல்லி இருக்கிறது. அதே  போலத்தான் ஆளுனர் மாளிகையில் அரசியில் நடவடிக்கைகள் இருக்ககூடாது. ஆளுனர் மாளிகைக்குள் சில அரசியில் மரபுகள் உள்ளது. அதைத்ததான் அவர்கள் செய்ய வேண்டும் தமிழிசை அப்படி சொல்லியிருந்தால் அதை மாற்றி கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். விவசாயத்தில் சிரமம் உள்ளது. நெல், கரும்பு, கோதுமைக்கு குறைந்த பட்சம் ஆதார விலையை நிர்ணயம் செய்துள்ளோம்.

ஆனால் புஞ்சை பயிர்களுக்கு அது போன்ற இல்லை. எண்ணைவித்து பொருட்களான நிலக்கடலை, எல்லு மற்றும் புஞ்சை பயிர்களுக்கு இல்லாததால் விவசாயிகள் அச்சப்படுகிறார்கள். சமையல் எண்ணை விலை ஏறியதற்கு காரணம் நாட்டில் எண்ணைவித்து பயிர்களை விவசாயிகள் பயிரிட அச்சப்படுகிறார்கள். தமிழகத்தில்புஞ்சை பயிர்கள்தான் அதிகமாக உள்ளது. மத்திய மாநில அரசுகள் புஞ்சை பயிர்களுக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் அப்போது தான் உற்பத்தி அதிகரிக்கும் ஆதார விலை கொடுத்தால் எண்ணை வித்துக்குகள் நாடு முழுவதும் பரவி எண்ணைவிலையும் குறையும்.  எண்ணைவித்து உள்ளடக்கிய புஞ்சை பயிர்களுக்கும் அரசு குறைந்த பட்ச ஆதாரவிலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறினார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad