தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க கோரி ஆயர் தலைமையில் அறப்போராட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 ஆகஸ்ட், 2022

தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க கோரி ஆயர் தலைமையில் அறப்போராட்டம் நடைபெற்றது.

தலித் கிறிஸ்தவர்களை, எஸ்.சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றக் கோரி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக கத்தோலிக்க திருச்சபை சார்பில் ஆகஸ்ட் 10ஆம் நாள் கருப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது 

அன்றைய தினம் தலித்   கிறிஸ்தவர்களின் பொருளாதார நிலைப்பாடு குறித்து மத்திய அரசால் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா சார்பில் கமிஷன் அமைக்கப்பட்டது, அதில் தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது, இதை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

தர்மபுரியில் மறை ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் அறப்போரட்டம் நடைபெற்றது, இதில் தர்மபுரி ,அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி என மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொறுப்பாளர் கோவேந்தன், எஸ்,சி எஸ்,டி கமிஷன் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் ஏசுதாஸ், பொம்மிடி பங்குகுழு தலைவர் எம், எஃப், ரமேஷ் மருத்துவர்   குருக்கள், இறை மக்கள் ,மாவட்ட அருட்பணி பேரவை, தலித் கிறிஸ்தவ மக்கள் மன்றம், தோழமை இயக்கம், பட்டியல் இனத்தார் என ஏராளமானோர் இந்த அறப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆயர்  லாரன்ஸ் பயஸ் தலைமையிலான குழுவினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad