மாரண்டஹள்ளியில் கலைஞர் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் அமைதி பேரணி நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

மாரண்டஹள்ளியில் கலைஞர் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் அமைதி பேரணி நடைபெற்றது.

மாரண்டஅள்ளி பேரூர் கழகம் சார்பில் கலைஞர் கருணாநிதி அவர்களின் 4 -ஆம்  ஆண்டு நினைவஞ்சலியோட்டி மாரண்டள்ளியில் உள்ள 15 வார்டு கிளைக் கழகங்களிலும் கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி விட்டு மாரண்டஅள்ளி முக்கிய வீதிகளின் வழியாக பாலக்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையிலும், பேரூர் கழகச் செயலாளரும், பேரூராட்சி தலைவருமான வெங்கடேசன் முன்னிலையிலும் அமைதிப் பேரணி நடைபெற்றது. 

முதலில் இபி காலனியில் தொடங்கிய ஊர்வலமானது 4 -ரோடு வழியாக பேருந்து நிலையம் மற்றும் பைபாஸ் ரோடு -மெயின் ரோடு வழியாக தேதி பேரணி நடைபெற்றது இந்த அமைதி பேரணையின் போது நூற்றுக்கணக்கான கட்சியினர் கலந்து கொண்டனர். 

மேலும் பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திகா பன்னீர்செல்வம் ,பேரூராட்சி கவுன்சிலர்கள் கீதா வடிவேல், லட்சுமி முனிராஜ், யதிந்தர், கார்த்திகேயன் ரீனா வேலு, அபிராமி காந்தி, சத்யா சிவகுமார், வெங்கடேசன், வசந்தி ரமேஷ், அவைத்தலைவர் செங்கல் மணி, துணைத் தலைவர் மாதையன், பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதிகள் பன்னீர் செல்வம், சுரேஷ், சாமனூர் ஊர் கவுண்டர் குமார், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் ராஜா, மாணவரணி மணிவண்ணன், வழக்கறிஞர் வடிவேல்,பஞ்சப்பள்ளி சாதப்பன், ஜானி,மாது, சிவக்குமார் மல்லாபுரம் கோவிந்தசாமி,  இளைஞரணி செந்தில்,தளபதி மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், 15 வார்டு கிளைச் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad