அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 8 ஆகஸ்ட், 2022

அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தனியார் துறை நிறுவனங்கள் -தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்துவகை பதிவுதாரர்களும் கலந்துக்கொள்ளும் தனியார் வேலைவாய்ப்பு முகாம், தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துக்கொள்ளும் "தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்". 

ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும்.

இதன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத்துறைகளில் அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத் தேர்வு அனுப்பப்படும். எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் தனியார் துறையில் வேலைக்கு சென்றால் அவர்களது பதிவு இரத்து செய்யப்படமாட்டாது.

இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனையாளர், மார்க்கெடிங் எக்ஸ்க்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், தட்டச்சர், அக்கவுண்டன்ட், கேசியர், மெக்கானிக், போன்ற பணிகளுக்கு தேர்வு செய்ய உள்ளனர். டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்துவித கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்த்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆகவே. மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பம் உள்ள நபர்கள் அனைவரும் வருகின்ற 12.08.2022 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இது தவிர இதர கல்வித்தகுதிகள் உடையோரும் தகுந்த பணியிடங்களுக்கு பரிசிலீக்கப்படுவர்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad