நல்லம்பள்ளி ஒன்றியம், கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியின் சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் மன்றங்களின் சார்பில் உலக இயற்கை வள பாதுகாப்பு நாள் மற்றும் உலக புலிகள் தினத்தை ஒட்டி சுற்றுச் சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கம் 02-08-2022 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பள்ளி மாணவிகள் தேவிகா, காயத்திரி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். தலைமை ஆசிரியர் சுகந்தி தலைமை வகித்தார்.
சூழலியலாளர் கோவை சதாசிவம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ”இன்னும் பிறக்காத தலைமுறைக்காக” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். டால்ஸ்டாய் அவர்களின் கதை, கிரெட்டாதுன்பர்க், போபால் நிகழ்வு, புவி வெப்பமாதல், நெகிழிகளால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசுபாடு குறித்து விவரித்ததோடு, இயற்கை வளங்களை அடுத்த தலைமுறைக்கும் விட்டுச் செல்ல மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த உரையாடலில் பள்ளிக் குழந்தைகள் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.
ஆசிரியர் ஐயப்பன் நன்றி கூறினார். ஆசிரியர்கள் அருள்ராஜ், மீனாட்சி, கிரிஜா ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை பள்ளியின் சுற்றுச் சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் லோகநாதன் செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக