ஏரியூரில் புதிதாக துவங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலந்தாய்வு துவங்கியது.
கடந்த மாதம் ஏழாம் தேதி தமிழக முதல்வர் அவர்கள் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் புதிய கல்லூரிகளை துவக்கி வைத்தார் அதில் தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் அமைக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் ஒன்று.
இந்நிலையில் இந்த கல்லூரிக்கான கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான நேரடி கலந்தாய்வு தற்போது துவங்கியுள்ளது. இந்த புதிய கல்லூரியில் 639 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர், தற்போது நேரடி கலந்தாய்வு மூலம் 31 மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவுகளில் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். கல்லூரி கலந்தாய்வு முதல்வர் பாலசுப்பிரமணியம் மற்றும் பேராசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
ஏரியூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலைக் கல்லூரி வேண்டும் என்பது, தற்போது நிறைவேறி உள்ளதால், இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக