கடத்தூர் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற நூலகர் தின விழாவில் கருத்தரங்கம், கலந்துரையாடல், சிறப்பாக பணியாற்றி வரும் நூலகர்களுக்கு பாராட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன, விழாவுக்கு மாவட்ட நூலக ஆய்வாளர் டி. மாதேஸ்வரி தலைமை வகித்தார்.
நூலகர்கள் பி. பிரபாகரன், தீ. சண்முகம், எம். முனிராஜ் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற முதல் நிலை நூலகர் து. முருகன், பொம்மிடி முருகேசன், அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார்.
"மாறிவரும் பரிமாணங்களில் நூலகங்களின் சேவைகள் மேம்படுத்த வேண்டியதன் அவசியம்" என்னும் தலைப்பில் நூலகர் சி. சரவணன் கருத்துரை வழங்கினார், "நூலகங்களின் சேவைகளை மேம்படுத்துவதில் நூலகர்களின் பங்கு" என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த ஆண்டு அதிக அளவில் புரவலர், நன்கொடை சேர்த்து, சிறப்பாகப் பணியாற்றி வரும் நூலகர்கள் எஸ். சரவணகுமார், கா. தேன்மொழி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர், முன்னதாக நூலகர் கே. சிவகாமி வரவேற்புரை வழங்கினார். முடிவில் நூலகர் எம்.ஜாகிர் உசேன் நன்றி கூறினார். விழாவில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் பணிபுரியும் நூலகர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக