தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பசுவபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்பாளப்பட்டி கிராமத்தில் பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் சரியான வடிகால் வசதி இல்லாத சூழ்நிலையில், குடிநீர் குழாய்களில் வெளியாகும் தண்ணீர் தெருவில் ஆறாக ஓடுகிறது.
மேலும் தெருவில் தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் அதிகள் உற்பத்தியாகி மலேரியா, டெங்கு போன்ற கொடிய நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது, மேலும் தெரு சாலையும் சரியாக இல்லை, அப்பகுதி மக்கள் சரியான சாலை வேண்டி மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோடரிக்கை விடுத்துள்ளனர்.
- எஸ் நந்தகுமார் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக