RDOவின் அலட்சிய பதிலால் ஆத்திரமடைந்த பொதுமக்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

RDOவின் அலட்சிய பதிலால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குருபரஹள்ளி புது காலனியில் ஊர் நத்தம் நிலத்தில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டாவை நிரந்தர குடியிருப்பு பட்டாவாக மாற்றித்தர ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் வருவாய் கோட்டாட்சியர் விசுவநாதன், பாப்பிரெட்டிப்பட்டி தாசில்தார் சுப்ரமணியன், வருவாய் ஆய்வாளர், அலுவலர் வெண்மணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் வீட்டு மனைகளில் குடியிருப்பை குறித்து ஆய்வு செய்த பொழுது பொதுமக்கள், ஒரு தனி நபர்பொது இடத்தில் ஆறு சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளார், அந்த இடத்திற்கு பட்டா வழங்கக்கூடாது என பொதுமக்கள் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர் இதற்கு அலட்சியப் போக்காக வருவாய் கோட்டாட்சியர் பதிலளித்ததால், பொதுமக்களுக்கும் வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

மேலும் தனி நபரிடம் கையூட்டல் பெற்று அரசு அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என மக்கள் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளனர், மேலும் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தில் பட்டா வழங்க கூடாது என ஊர்  பொதுமக்கள்  வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் மனுவினை அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad