தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்த்து வருவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் நல குறைபாடுகள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு வருவதாகவும் மாவட்ட சுகாதார இணை இயக்குநர் டாக்டர் சாந்தி அவர்களுக்கு புகார்கள் சென்றன. அவரது உத்தரவின் பேரில் டாக்டர்.பாலசுப்ரமணியம், மருந்துகள் ஆய்வாளர் சந்திராமேரி, வி.ஏ.ஓ. மகாலிங்கம் ஆகியோர் அடங்கிய போலீ மருத்துவர் ஒழிப்பு குழுவினர் இன்று எலங்காளப்பட்டி கிராமத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டதில் வெள்ளிசந்தையை அடுத்த கெட்டுக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் முருகேசன் (வயது.48) என்பதும் 10ம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு கடந்த 10 ஆண்டுகளாக எலங்காளப்பட்டி கிராமத்தில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி கொண்டு அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததும், அரசு தடை செய்த மருந்து மாத்திரைகளை அனுதியின்றி சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
உடனடியாக மெடிக்கல் ஸ்டோருக்கு சீல் வைத்து, முருகேசனை கைது செய்த பாலக்கோடு போலீசார் அவரிடமிருந்த குளுக்கோஸ் பாட்டில்கள், ஊசிகள், மருந்து மாத்திரைகளை பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக