பொது வழி பாதை அமைக்க 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு கொடுத்த நபர்களுக்கு பாராட்டு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 10 ஜூன், 2023

பொது வழி பாதை அமைக்க 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு கொடுத்த நபர்களுக்கு பாராட்டு.


தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாகல்அள்ளி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் மயானம், ஏரி மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக பாதைகள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் அரசு மூலம் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் தனியாருக்கு சொந்தமான நிலமாக இருந்ததினால் சாலை அமைக்க முடியாமல் இருந்தது. 


இதனால் பாகல்அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் குமார் ஆகியோர் ஊர் பொதுமக்களிடம் பேசி சாலை அமைப்பதற்கு நிலங்கள் கொடுங்கள் என்ன கேட்டிருந்தனர். அதற்கு மற்றவர்கள் நிலத்தை தர மறுத்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த் மனைவி ராஜலட்சுமி, முருகன் மகன் இளங்கோ ஆகியோர் ஒன்றிணைந்து 6 ஆயிரம் சதுர அடி, சுமார் 30 லட்சம் ரூபாய் நிலத்தை பொதுப்பாதை அமைப்பதற்காக இலவசமாக கொடுக்க முன்வந்துள்ளனர். 


அந்த நிலத்திற்கு உண்டான பத்திரத்தை நேற்று நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனால் அவருக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, மாவட்ட கவுன்சிலர் குமார், இயக்குனர் மனோகரன், பாகல்அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மா.முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் காமராஜ், வளர்மதி தமிழ்செல்வன், அன்பு கார்த்திக், ஊராட்சி செயலர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad