தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகளில் 20 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் நிலையில், குடிநீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதனை பூர்த்தி செய்யும் வகையில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் 4 .65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய 4 கிணறுகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஏப்ரல் 2ம் தேதி திட்டத்தை துவக்கி வைத்தார்.


அதனை தொடர்ந்து இன்று சின்னாறு படுகையில் 15 மீட்டர் ஆழம், 4 மீட்டர் அகலம் கொண்ட 4 புதிய கிணறுகள் அமைக்கும் பணிக்கு பேருராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்கள் பூமி பூஜை செய்து திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் கணேசமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி, பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, தலைமை எழுத்தர் அபுபக்கர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக