தமிழ் சினிமா நடிகர் விஜய் அவர்களின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடிய விஜய் மக்கள் இயக்கத்தினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 22 ஜூன், 2023

தமிழ் சினிமா நடிகர் விஜய் அவர்களின் 49 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடிய விஜய் மக்கள் இயக்கத்தினர்.


தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக உள்ள விஜய் அவர்களின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் அரூர் இந்தியன் ஜிப்ஸி ஆதரவற்றோர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க அரூர் ஒன்றிய தலைவர் சக்பால் தலைமையில்  கேக் வெட்டி மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி  வழங்கி பிறந்த நாளை கொண்டாடினார். 


இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்கக ஒன்றிய தலைவர் சக்பால், பொருலாளர் எஸ்.கே.செந்தில், துணை தலைவர் திருமலை, துணை செயலாளர் சென்னப்பன், இணை செயலாளர்கள் செண்பகம், ஜோஸ், வார்டன் ஜானகிராமன் உட்பட மக்கள் இயக்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad