பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று 50வது ஆண்டு பொன் விழா இனிப்பு வழங்கி தொழிலாளர்கள் கொண்டாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 7 ஜூன், 2023

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று 50வது ஆண்டு பொன் விழா இனிப்பு வழங்கி தொழிலாளர்கள் கொண்டாட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை 1973ம் ஆண்டு துவக்கப்பட்டது. மாவட்டத்தில் பிரதான விவசாய பயிர்களான நெல், வாழை, கரும்பு பயிரிடப்படுகிறது. இதில் பிரதானமாக விவசாயிகளால் கரும்பு பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் பயிரிடப்படும் கரும்பு அதிக அளவில் பிழிப்பு திறன் கொண்டதால், இந்தியாவிலேயே  தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை முதன்மை சர்க்கரை ஆலையாக திகழ்ந்து வருகிறது.


4 இலட்சம் மெட்ரிக் டன் வரை உற்பத்தி செய்யும் தேதிய அளவில் நற்சான்றிதழ் பெற்ற சர்க்கரை ஆலை என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்த சர்க்கரை ஆலையை நம்பி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதரமாக திகழ்ந்து வருகிறது.


இந்த நிலையில் சர்க்கரை ஆலை தொடங்கி 50வது பொன் விழா தினத்தை முன்னிட்டு இன்று  சர்க்கரை ஆலை தொழிலாளர்கள், அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் ஒன்றினைந்து ஆலை வளாகத்தில் உள்ள விநாயகர், முனியப்பன் சுவாமிக்கு பூஜை செய்து கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொன்டாடினர். முன்னதாக 50வது பொன் விழாவை முன்னிட்டு ஆலை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். இந் நிகழ்ச்சியில்  தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad