தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்தூபி மைதானத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தியின் 53வது பிறந்த நாள் விழா நகர தலைவர் கணேசன் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். ஸ்தூபி மைதானம் ரவுண்டானாவில் உள்ள காங்கிரஸ் கட்சி கொடியை கட்சியின் மூத்த நிர்வாகி சீதாராமன் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதையடுத்து பாலக்கோடு கடைவீதியில் உள்ள ஸ்ரீஞாணபிள்ளையார் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டு வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வட்டார தலைவர் சிலம்பரசன், வழக்கறிஞர் குப்பன், செந்தில், அன்பழகன், காட்டு ராஜா, பாலாஜிகுமார், சுப்ரமணி, வீரமணி, வெங்கடேசன், மேல் தெரு கிருஷ்ணன், ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக