தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாகலஅள்ளி ஊராட்சி, பட்டகப்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்ட நிதியில் ரூபாய் 8.05 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. தார்சாலை அமைக்கும் பணியை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, மாவட்ட துணை செயலாளர் த.காமராஜ், துணைத் தலைவர் ரம்யாகுமார், ஒன்றிய செயலாளர் அன்புகார்த்திக், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குமார், ஒன்றிய கவுன்சிலர் வளர்மதி தமிழ்செல்வன், ஊராட்சி செயலாளர் செல்வம், வார்டு உறுப்பினர்கள் சிவகாமி, செந்தில் உள்ளிட்ட ஊர்பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக