மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பென்னகரத்தில் 9-வது சர்வதேச யோகா தினம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 ஜூன், 2023

மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பென்னகரத்தில் 9-வது சர்வதேச யோகா தினம்.


மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பென்னகரத்தில் 9-வது சர்வதேச யோகா தினமானது நாகலக்ஷ்மி (எ) விஜயராணி நீதிபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவின் மருத்துவ ஆலுவலர் மரு.கோ.முனுசாமி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகாவை பற்றி சிறப்புரை நிகழ்த்தி ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான இயற்கை உணவுகள் பழங்கள் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பஞ்ச தந்திர முறைகளையும்  உடலை  சுத்தப்படுத்தும் முறைகளை பற்றி விலகினார்.


மேலும் சூரிய நமஸ்கார யோக பயிற்சிகளை நீதிமன்ற வளாகத்தில் செயல்முறையாக வழங்கினர். இந்நிகழ்வில் சின்னபள்ளதுர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் மா.பழனி மற்றும் நீதிமன்ற ஆலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு பணியாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad