தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மாநில நெடுஞ்சாலை ஒட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் சாலையின் எதிர் திசையில் உள்ள அண்ணா துவக்கப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.


தினந்தோறும் காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் பள்ளியை விட்டு வீடு திரும்பும் மாணவ-மாணவியர், ஆபத்தான நிலையில் பல்வேறு கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் மாநில நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர். நெடுஞ்சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்களால் மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறுகிறது. பள்ளி மாணவ, மாணவிகள் சாலையை கடக்கும் போது பெரும் அச்சத்துடன் கடக்க வேண்டிய சூழல் உள்ளது.
பள்ளி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் அல்லது அதிவேகத்தில் வரும் வாகங்களை கட்டுப்படுத்த எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளாமல் மெத்தன போக்கை கடைபிடித்து வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக