அங்காண்டஅள்ளி ஏரிக்கரையில் மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவரை அரிவாளால் வெட்டிய நபர் இன்று கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 17 ஜூன், 2023

அங்காண்டஅள்ளி ஏரிக்கரையில் மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவரை அரிவாளால் வெட்டிய நபர் இன்று கைது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தண்டுகாரனஅள்ளி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் பீர்துரை(வயது.27) இவரும் அதே பகுதியை சேர்ந்த பத்திராஜ் (வயது.30) என்பவரும் நேற்று மாலை அக்காண்டஅள்ளி ஏரிகரை அருகே ஒன்றாக அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர்.


திடிரென இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பத்திராஜ் தான் வைத்திருந்த அரிவாளால் பீர் துரையை சராமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றான். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.


தகவலறிந்த பாலக்கோடு போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தலைமறைவான பத்திராஜை கைது  செய்து இன்று பாலக்கோடு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கருத்துகள் இல்லை:

Post Top Ad