தடங்கம் ஊராட்சி பகுதியில் கழிவு நீர் கல்வாய் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 12 ஜூன், 2023

தடங்கம் ஊராட்சி பகுதியில் கழிவு நீர் கல்வாய் திட்ட பணிகளுக்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் விழா.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம, தடங்கம் ஊராட்சி நேருநகர் மற்றும் அதியமான்நகர் ஆகிய கிராமங்களில் கழிவுநீர் கால்வாய் வசதியில்லாத காரணத்தால் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்ல முடியாத நிலையில் அப்பகுதிலேயே தேங்கி நின்று துர்நாற்றமும்  சுகாதார சீர்கேடும் விளைவித்தன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அப்பகுதிகளை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் நேரில் பார்வையிட்டார். 


சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் இரண்டு கிராமங்களிலும் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தருவதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.  நேருநகர் கிராமத்தில் ரூபாய் 9.50 இலட்சம் மதிப்பீட்டிலும், அதியமான்நகர் கிராமத்தில் ரூபாய் 3.00 இலட்சம் மதிப்பீட்டிலும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்தார். இப்பணிகளுக்காக பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. 


தருமபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் இரண்டு பணிகளையும் தொடங்கி வைத்தார், இந்நிகழ்வுகளில்  மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒ.கே.சுப்ரமணியம்  பசுமைத் தாயக மாநில துணை செயலாளர் க.மாது  மாவட்ட துணை செயலாளர் மு. மனோகரன் மாவட்ட தொழிற் சங்க செயலாளர் ஈ.பி.சின்னசாமி  ஒன்றிய செயலாளர் ஒ.கே.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய தலைவர் வெங்கடேசன், ஒன்றிய அமைப்பு செயலாளர் ஒ.கே.எஸ்.குமார், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்து, சக்தி மேஸ்திரி, ஒன்றிய துணை செயலாளர் ஆனந்தன் மு.ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் குணசீலன் மற்றும் கந்தன் மணி மோகன் குண்டுமணி உள்ளிட்ட ஊர்பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad