தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நெடுஞ்சாலை துறை சார்பில் பசுமை நிறைந்த சாலை பாதுகாப்பான வழிப்பயணம் என்ற குறிக்கோளுடன் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணி இன்று எர்ரனஅள்ளி சாலையில் துவங்கப்பட்டது.
இதில் பாலக்கோடு அருகே எர்ரணஅள்ளி முதல் நாகதாசம்பட்டி சாலை வரையிலும், வெள்ளி சந்தை முதல் மாரண்டஅள்ளி சாலை வரையிலும் மற்றும் பாலக்கோடு புறவழி சாலைகளில் சாலையோரம் சுமார் 2400 மரக்கன்றுகள் நடும் பணியினை உதவிக் கோட்டப் பொறியாளர் கவிதா இன்று மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.
இப்பணியானது தொடர்ந்து உதவிப் பொறியாளர் நவீன், சாலை ஆய்வாளர் மற்றும் சாலைப்பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக