நேரு யுவ கேந்திராவின் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த மூன்றாவது கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 ஜூன், 2023

நேரு யுவ கேந்திராவின் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த மூன்றாவது கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி.


தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த மூன்றாவது கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி தருமபுரி அரசு தொழில்கல்வி நிலையம் கடகத்தூரில் உதவி பயிற்சி அலுவலர் மகேந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது.உதவி பயிற்சி அலுவலர் செந்தில் குமார், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


ஸ்பீடு தொண்டு நிறுவன துணைத்தலைவர் பெருமாள் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துரைகள் வழங்கினார்.நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் மழைநீர் சேகரிப்பு குறித்த உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். ஓவியப் போட்டி நடத்தப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் உதவி பயிற்சி அலுவலர் மகேந்திரன் வழங்கினார்.மேலும் அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.


100க்கும் மேலான அரசு தொழில் கல்வி நிலைய மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் ‌நிறைவாக தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad