தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக நகர தலைவர் வேலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கரன் கலந்து கொண்டு கண்டன உரையை துவக்கி வைத்தார்.
மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தின் மூலம் 5.30 கோடி மதிப்பிலான 18 வார்டுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் பணியை உடனே நிறைவேற்றவும், ஆமை வேகத்தில் நடைபெறும் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவும், கழிவு நீர் கால்வாயை முறையாக தூர்வார வேண்டும், குண்டும் குழியுமாக உள்ள பெல்ரம்பட்டி - கல்கூடபட்டி சாலையை உடனே சீரமைக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக