தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்க நாளை கடைசி நாள் கல்லூரி என கல்லூரி முதல்வர் செண்பக லெட்சுமி தெரிவித்துள்ளார்.
2023- 24ம் கல்வி ஆண்டிற்கான இளங்கலை பட்டபடிப்பிற்க்கான மாணவர் சேர்க்கை கடந்த மே மாதம் 31ம் தேதியிலிருந்து நடைப்பெற்று வந்தது. இணையதளம் வாயிலாக விண்ணப்பித்த மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, நிரப்பபடாமல் உள்ள காலியிடங்களுக்கான நேரடி மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் கடந்த 14ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது, நாளை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்குதல் நாளை .கடைசி நாள் என்பதால் இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கல்லூரி முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் மாணவர்கள் வரும் போது TC, மதிப்பெண், சாதி சான்றிதழ்களில் அசல் மற்றும் நகல் எடுத்து வர கேட்டுக் கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக