தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரியுடன் இணைந்து தாளாளர் முனைவர் கோவிந்த் தலைமையில் இன்று நடைபெற்றது.நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தலைவர் மகேஷ்வரி பெரியசாமி முன்னிலை வகித்தார்.
மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் சுவித்ரா, இந்தியன் வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு மைய இயக்குநர் புவனேஸ்வரி, மருதம் நெல்லி எப் எம் நிலைய இயக்குநர் கார்த்திக், முதல்வர் மகேந்திரன், தமிழ் நாடு மாசுக்கட்டுப்பாட்டு உதவி செயற்பொறியாளர் லாவண்யா, பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் கோவிந்தராஜ், தருமபுரி அரசு கலைக் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் சிவப்பிரகாசம், சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனி, மாவட்ட முன்னாள் கவுன்சிலர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாவட்ட இளைஞர் விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட கவிதை, ஓவியம், பேச்சுப் போட்டி, மொபைல் மூலம் போட்டோ எடுத்தல் போட்டி, கிராமிய கலைக்குழு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டது.பின்னர் 2022-23ஆம் ஆண்டில் சிறந்த சமூக சேவை புரிந்த பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் அன்னை இந்திரா நகர் ஏ சி ஜே அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்ற த்திற்கு சிறந்த மன்ற விருது பரிசு ரூ.25000/-வழங்கப்பட்டது.
மேலும் 10க்கும் மேற்ப்பட்ட இளைஞர் நற்பணி மன்றங்களுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு பாப்பாரப்பட்டியில் நேரு யுவ கேந்திராவின் சார்பில் நடத்தப்பட்ட தையல் பயிற்சி மகளிருக்கான சான்றிதழ் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. மஞ்சப்பை விழிப்புணர்வு, சிறுதானிய உணவுகள், பிட் இந்தியா திட்டம், சுய வேலைவாய்ப்பு மற்றும் இந்தியன் வங்கியின் இலவச பயிற்சிகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்பட்டது.
போட்டிகளில் வெற்றியர்களை தேர்வு செய்ய நடுவர்களாக உதவி பேராசிரியர் நாகராஜ், சிமிலா, ஓவிய ஆசிரியர்கள் வீரபத்திரன், குணசேகரன், இசை ஆசிரியைகள் சாய் விஜயலட்சுமி ஜெயா, மொபைல் போட்டியின் நடுவர்களாக கல்பனா ரவி, ராம்குமார் ஆகியோர் பணியாற்றினர். தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் மாவட்ட இளைஞர் அலுவலர் பிரேம் பரத்குமார் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.
நிகழச்சியில் 300க்கும் மேற்ப்பட்ட கல்லூரி பள்ளி மாணவ மாணவிகள் இளைஞர் மன்ற நிர்வாகிகள் மகளிர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக