பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நாளை மாரடைப்பு மற்றும் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற சுகாதார நலப்பணிகள் இனை இயக்குநர் டாக்டர் .சாந்தி அழைப்பு.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய்கள் வராமல் எவ்வாறு தடுப்பது, நோய் வருவதற்கான அறிகுறிகள், நோய் வந்த பின்பு அதனை குணப்படுத்துவதற்கான வழிமுறைகள், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவு உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் சாந்தி அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து இருதயம் மற்றும் நரம்பியல் துறை மருத்துவ நிபுணர்கள் வருகை தர உள்ளதால், அது சமயம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற தர்மபுரி மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் .M .சாந்தி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக