தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றிய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பாப்பாரப்பட்டி பிரிவு சாலையில் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் குமார் தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞர் அணி தலைவர் முருகன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சத்தியராஜ், பொருளாளர் சதிஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் ரசிகர்கள் கேக் வெட்டி, பட்டாசு வெடித்து அண்ணதானம் வழங்கி கொண்டாடினர். முன்னதாக சோமனஅள்ளி, கசியம்பட்டி, கோயிலூரான் கொட்டாய், கடமடை கிராமத்தில் விஜய் மக்கள் இயக்கம் புதிய கிளை கழகம் துவக்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் சிவகுமார், துணைத் தலைவர் ஜிக்கிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக