சின்னாறு அணையில் குடிபோதையில் நீரில் மூழ்கி வெல்டிங் தொழிலாளி சாவு - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 ஜூன், 2023

சின்னாறு அணையில் குடிபோதையில் நீரில் மூழ்கி வெல்டிங் தொழிலாளி சாவு


கர்நாடகா மாநிலம் ஒங்கசந்திரா பகுதியை சேர்ந்த வெல்டிங்தொழிலாளி கிரண் (வயது.32) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று நண்பர்களுடன் பஞ்சப்பள்ளி சின்னாறு அனையை சுற்றி பார்க்க வந்துள்ளனர்.


அப்போது நண்பர்களுடன் மது அருந்திய கிரண் சின்னாறு அணையில் குளிக்க சென்றுள்ளார். போதையில் தண்ணீரின் ஆழத்திற்க்கு சென்றவர் நீரில் மூழ்கி  மூச்சு திணறி உயிரிழந்தார்.


தகவலறிந்த பஞ்சப்பள்ளி போலீசார் கிரணின் உடலை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad