மின் நிறுத்தம் ரத்து செய்யபடுவதாக அறிவிப்பு, வெள்ளிசந்தை துணை மின் நிலைய செயற்பொறியாளர் வனிதா அறிவிப்பு.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, வெள்ளி சந்தை துணை மின்நிலைய செயற்பொறியாளர் வனிதா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மாதந்திர பராமரிப்பு பணிக்காக பாலக்கோடு சுற்று வட்டார பகுதியான பாலக்கோடு, சுகர்மில், எர்ரன அள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரணஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளி சந்தை, பேளாரஅள்ளி, எண்டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்டஅள்ளி, ஜக்கசமுத்திரம், மல்லுப்பட்டி, மல்லாபுரம், பொரத்தூர், மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, தப்பை, மதகிரி, காட்டம்பட்டி, கரகதஅள்ளி, புலிக்கரை உள்ளிட்ட சுற்றுவட்டாரபகுதிகளில் நாளை 20ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக இருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக மின் நிறுத்தம் இரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக