தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி ரயில் நிலையம் அருகில் தாய் மற்றும் மூன்று வயது ஆண் குழந்தையுடன் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இருவரும் மரணமடைந்தனர். இவரது கணவர் கூலி தொழிலாளி இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தை ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.


ஏழ்மையில் இருப்பதால் நல்லடக்கம் செய்ய முடியாமல் தவித்தார் அவரது கணவர், இந்த தகவல் அறிந்து மை தருமபுரி அமைப்பினர், மரணமடைந்த தாய் மற்றும் குழந்தை இருவரையும் மின் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர். இந்த நிகழ்வில் மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், சதீஸ் குமார் ராஜா, தமிழ்செல்வன் ஆகியோர் இருவருக்கும் இறுதி இறுதி மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 58 ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக