இந்நிலையில் கோவிந்தராஜுக்கு முனியப்பன், விஜயராகவன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் தங்களது உறவினர்களான கோபால், மாதேஷ் இருவரும் ஏரி ஓரமாக வசித்து வந்தனர். இந்த நான்கு குடும்பத்தினரும் தங்களது விவசாய நிலங்களுக்கும், வீடுகளுக்கும் செல்வதற்கு கிராம சாலையில் இருந்து ஏரிக்கரையின் மீது சென்று தங்களது வீடு மற்றும் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள ஒரு சிலர் விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக, பாதையை விலை கொடுத்து வாங்கியுள்ளனர். அந்தப் பாதையில் ஓரிடத்தில் மின்கம்பத்தின் ஸ்டே கம்பி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அந்த பாதையில் செல்ல முடியும். நான்கு சக்கர வாகனங்கள், விவசாயப் பணிகளை செய்வதற்கான வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் பாதையில் உள்ள மின்கம்பத்தின் ஸ்டே கம்பியை மாற்றி அமைத்து, பாதையை முழுமையாக பயன்படுத்தும் வகையில் செய்து கொடுக்க வேண்டும் என மின்சார வாரியத்தில் கேட்டுள்ளனர். அப்பொழுது மின்சாரத் துறையினர் நேரில் வந்து மின்கம்பத்திற்கான ஸ்டே கம்பியை மாற்றி அமைக்க வேண்டும் என்றால், கம்பம் இருக்கின்ற பகுதியில் மின்மாற்றி ஒன்று அமைத்தால், மட்டுமே இதனை மாற்றி அமைக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
அப்பொழுது கிராமமக்கள் அருகில் இருந்த விவசாய நில உரிமையாளர்களிடம் கேட்டுள்ளனர். அந்த நில உரிமையாளரான விஜயராகவன், தனக்கு இருப்பது 40 சென்ட் நிலம், அதில் ஏற்கனவே ஏழு இடங்களில் மின்கம்பங்கள் இருந்து வருகிறது. இதனால் தன்னால் முழுமையாக விவசாயம் செய்து வர முடியவில்லை. என்னால் இடம் வழங்க முடியாது என தெரிவித்துள்ளார். தனது நிலத்தில் மின்மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பு இருக்கும் என்பதால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இந்த பாதையை அந்தப் பகுதியில் உள்ள மக்கள் முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. தொடர்ந்து பலமுறை முனியப்பன் மற்றும் விஜயராகவனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் தங்களது விவசாய நிலத்தில் இருக்கும் மின்கம்பங்களை எடுத்து விடுங்கள், ஆனால் மின் மாற்றி அமைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
இதனால் கிராம மக்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், பயன் இல்லாததால் முனியப்பன், விஜயராகவன், மாதேஷ், கோபால் ஆகியோர் பயன்படுத்தி வருகின்ற ஏரிக்கரை பகுதியில் சாலையில் இரண்டு இடங்களில் ஜேசிபி இயந்தித்தின் மூலம் குழி வெட்டி வைத்துள்ளனர். மேலும் ஏரி தூர் வாரும் பணியின் போது, ஜேசிபி இயந்திரம் மூலம், ஏரிக்கரை மீது முழுவதுமாக சாலையை பயன்படுத்த முடியாத அளவிற்கு மண்ணைக் கொட்டி வைத்துள்ளனர்.
இதனால் இந்த நான்கு குடும்பத்தைச் சார்ந்தவர்களும் ஏரி கரையில் செல்ல முடியாமல், ஏரியில் இறங்கி சென்று வருகின்றனர். மேலும் ஏரியில் ஒரு சில இடங்களில் தண்ணீர் இருப்பதால், பாதை வசதி இல்லாத காரணத்தால், தண்ணீரில் இறங்கி செல்கின்ற நிலை இருந்து வருகிறது. அதே போல் பள்ளிக்கு செல்லுகின்ற சிறு பிள்ளைகளும், அந்த தண்ணீரிலேயே இறங்கி நடந்து சென்று பள்ளிக்கு செல்வதும், திரும்பி வீட்டிற்கும் வரும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர். எனவே பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள சாலைகளை முன் விரோதம் காரணமாக கிராம மக்கள் ஏரிக்கரையின் மீது இரண்டு இடங்களில் குழி தோண்டி வைத்துள்ளதால், இந்த நான்கு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே இந்த நான்கு குடும்பத்தினருக்கும் பொது வழி பாதையை பயன்படுத்துவதற்கு அரசு ஊரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக