தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 17 ஜூன், 2023

தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.


தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு (TN SKILLS COMPETITION) விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல் இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. பல்கலைக்கழகம் / மருத்துவம் / பொறியியல் / கலை மற்றும் அறிவியல் / பாலிடெக்னிக் / ஐடிஐ / பள்ளிப டித்த மற்றும் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு 30.06.2023 - ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்போட்டிகள் வருகின்ற ஜீலை-2023-ல் நடைபெற உள்ளது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்படும். மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு, உலகத் திறன் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் உள்ள லியான் நகரில் 2024 ஆம் ஆண்டு WORLD SKILLS COMPETITION) நடைபெற உள்ளது. மாநில அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு மிகச்சிறந்த நிறுவனத்தில் பயிற்சி அளித்து தேசிய / சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஆகும் செலவினத்தை அரசே மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

இந்த போட்டியில் பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில், மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளதால் இதில் பங்கேற்க தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் விண்ணப்பதாரர்களிடமிருந்து naanmudhalvan.tn.gov.in./tnskills என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு tnskills@naanmudhalvan.in. என்ற வலைதளத்தினை பார்வையிடலாம்.


10 துறைகளில் உள்ள 55 தொழிற்பிரிவுகளில் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க வருகின்ற 30-ம் தேதி கடைசி நாள் என்பதால் தருமபுரி மாவட்ட இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad