நத்தஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அப்பணிக்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 ஜூன், 2023

நத்தஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அப்பணிக்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா.

photo_2023-06-30_22-40-44

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி  ஒன்றியம், இண்டூர் ஊராட்சி நத்தஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 5.00 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அப்பணிக்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தருமபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

thagadur%20kural

Copy%20of%20Shepherds%20king%20music%20school

இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் முசோலின், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி, மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, மாவட்ட பொறுப்பாளர் இ.மா.பாலகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் மு.மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் பெ.சக்தி, அன்புகார்த்திக், மாவட்ட துணை தலைவர் டாக்டர் பெருமாள், மாவட்ட இளைஞர் சங்க துணை செயலாளர் மாதப்பன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வீரராகவன், ஒன்றிய தலைவர் விஜியகுமார், ஒன்றிய இளைஞர் சங்க துணை செயலாளர் சஞ்சீவன், கோவிந்தசாமி, ஆனந்தன், மாதேஷ், செல்வம், மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் 

கருத்துகள் இல்லை:

Post Top Ad