மொரப்பூர் ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் சுய முன்னேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் இரா.கணேஷ் வரவேற்று பேசினார். நிறுவனர் ராமலிங்கம் தலைமையரை வழங்கினார். தாளாளர் கோபி முன்னிலையுரை ஆற்றினார். கல்லூரி துறைத்தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கணினி பட்டதாரி ஆசிரியர் தகடூர் ப.அறிவொளி பங்கேற்று சிறப்புரை வழங்கினார். நிறைவாக இயந்திரவியல் துறைத்தலைவர் அருண் பிரசாத் நன்றி கூறினார். நிகழ்வில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக