தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதியில் உள்ள குடிநீர் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு அம்ருத் திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் குழாய் இனைப்பு வழங்கப்பட உள்ளது. எனவே குடிநீர் இனைப்பு இல்லாத குடியிருப்புக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் உடைடியாக பேரூராட்சி அலுவலகத்தை தொடர்பு கொண்டு இந்த அறியவாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றும் 18 வார்டுகளில் தெரு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் அதற்கு முன்னர் குடிநீர் குழாய் பொருத்தப்பட உள்ளது.


தெரு சாலைகள் அமைக்கப்பட்ட பின்னர் புதிய குடிநீர் இணைப்பு வழங்க இயலாது என்பதால் உடனடியாக இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி குடிநீர் குழாய் அமைத்துக் கொள்ள பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் டார்த்தி அவர்கள் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீர் இனைப்பிற்க்கள விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
19.06.2023 முதல் வீட்டு வரி இல்லாதவர்கள் புதிய வரிவிதிப்பு செய்து கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் - என இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பபட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக