மாரண்டஅள்ளி பேரூராட்சி கவுன்சிலர்கள் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர செயல் அலுவலரிடம் மனு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 ஜூன், 2023

மாரண்டஅள்ளி பேரூராட்சி கவுன்சிலர்கள் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர செயல் அலுவலரிடம் மனு.


தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேருராட்சியில் 15வார்டுகள் உள்ளன. திமுகவை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பேரூராட்சி தலைவராக உள்ளார். பதவியேற்று 17 மாதங்கள்  ஆன நிலையில் வார்டு பகுதிகளுக்கு தேவையான குடிநீர், சாக்கடை கால்வாய், தெருவிளக்கு, சாலை சீரமைத்தல் உள்ளிட்ட எந்த கோரிக்கைகளும் நிறைவேற்றி தரவில்லை, இது குறித்து கவுன்சிலர்கள் பல முறை கோரிக்கை வைத்தும் இவர்களது கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அதிருப்தி அடைந்த  11 கவுன்சிலர்கள் தலைவரை மாற்றி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். 


அதனை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷாவிடம் தலைவர் வெங்கடேசன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி கையொப்பமிட்ட புகார் மனு அளித்தனர்.


மேலும்  தர்மபுரி பேரூராட்சிகள் உதவி இயக்குநர் குருராஜனிடமும்  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி கையொப்பமிட்ட புகார் மனு அளித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad