இந்த கல்வியாண்டின் முதல் நாளான இன்று ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல் மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் வெ. மாதன் தலைமை தாங்கினார்.


பென்னாகரம் வட்டார கல்வி அலுவலர் இரா. மணிகிருஷ்ணன் மாணவர்களுக்கு பாடநூல் மற்றும் நோட்டு புத்தகங்களை வழங்கி இந்த கல்வி ஆண்டில் அனைத்து குழந்தைகளும் சிறப்பாக கல்வி கற்க வேண்டுமென வாழ்த்து கூறினார். அத்துடன் பள்ளி வயது மாணவர்கள் அனைவரும் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும். குழந்தை தொழிலாளர் இல்லாத நிலை உருவாக வேண்டும் எனக் கூறி குழந்தை தொழிலாளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மா. பழனி செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, கல்பனா திலகவதி, ராஜேஸ்வரி, ரேக்கா மற்றும் சத்துணவு அமைப்பாளர் அம்பிகா, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக