வீராசனூர் கிராமத்தில் பெற்றோர்கள் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 7 ஜூன், 2023

வீராசனூர் கிராமத்தில் பெற்றோர்கள் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை கண்டித்ததால் வாலிபர் தற்கொலை.


தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே வீராசனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வம் இவரது மகன் முரளி (வயது. 26) இன்னும் திருமணம் ஆகவில்லை. முரளிக்கு திருமணம் செய்ய அவரது தந்தை பெண் தேடி வந்தார்.



ஆனால் முரளி எந்த வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்ததால் யாரும் பெண் தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த முரளியின் தந்தை செல்வம்,  முரளியிடம் ஒழுங்காக ஏதாவது ஒரு வேலைக்கு செல் என கண்டித்துள்ளார்.


இதனால் மணமுடைந்து காணப்பட்ட முரளி நேற்றிரவு படுக்கையறையில் உள்ள மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து இன்று   வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad