தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் விருப்பத்தை பூர்த்தி செய்ய விதத்தில் ராம்நாத் திரையரங்கு புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டது, முதல் முறையாக காலத்திற்கு ஏற்ப புதிய Digital Cinema HD புத்தம் H2K புதிய பொழிவுடன் மிக அகன்ற வெண்திரையில் அரங்கம் அதிரும் ஒளி & ஒலியுடன் dts Digital 7.1 surround sound புதிய லேட்டஸ்ட் டிஜிட்டல் dts sound ஒலியுடன் புதிய குஷன் சீட் எண் வரிசையிலும், முன் பதிவு முறையிலும் தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது.


தினசரி 4காட்சிகள் காட்சி நேரம் முறையே காலை: 10.30 மணி, மதியம்: 2.00 மணி, மாலை: 6.00 மணி மற்றும் இரவு : 9.30 என்ற நேரத்தில் திரையிடப்படுகிறது. முதல் நாள் முதல் காட்சியாக அஜித்குமார் நடித்து இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற துணிவு திரைப்படம் திரையிடப்பட்டது. முதல் காட்சியினை சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்தனர். இறுதியில் திரையரங்கின் உரிமையாளர் வைரம் அவர்கள் திரைப்படம் பார்க்க வந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக