தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த மூன்றாவது கட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி அதியமான் கோட்டை ஊராட்சி ஜெட்டிஅள்ளியில் உள்ள சுவாமி விவேகானந்தர் செவிலியர் கல்லூரியில் முதல்வர் முனைவர் உமாபதி தலைமையில் நடைபெற்றது.அதியமான்கோட்டை திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் விக்ரம் முன்னிலை வகித்தார்.
கட்டுரை பேச்சு ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் சுவாமி விவேகானந்தர் செவிலியர் கல்லூரியின் முதல்வர் முனைவர் உமாபதி வழங்கினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். நத்தள்ளி ஸ்பீடு தொண்டு நிறுவன துணைத்தலைவர் மற்றும் மாநில பயிற்றுநர் பெருமாள் கலந்து கொண்டு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துரைகள் வழங்கினார்.


பின்னர் செவிலியர் கல்லூரியின் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.200க்கும் மேற்ப்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.நிறைவாக நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக